பசி எடுக்க
கறிவேப்பிலை, மிளகு இரண்டையும் நெய்யில் வறுத்து வெந்நீர் ஊற்றி அரைத்து குடித்தால் பசி எடுக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
கறிவேப்பிலை, மிளகு இரண்டையும் நெய்யில் வறுத்து வெந்நீர் ஊற்றி அரைத்து குடித்தால் பசி எடுக்கும்.
கோரைக் கிழங்கைக் அரைத்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து சாப்பிட்டுவர பசியின்மை குறையும்.
ஆதண்டை இலையை நெய்யில் வதக்கித் துவையலாக்கி உணவுடன் சேர்த்துக் கொண்டால் பசியின்மை நீங்கி பசி உண்டாகும்.
இலந்தை வேர்ப்பட்டையைப் பொடி 4 சிட்டிகை அளவு எடுத்து வெந்நீருடன் இரவில் குடிக்க பசியின்மை நீங்கும்
கை பிடியளவு கல்யாண முருங்கை இலையை எடுத்து சாறு பிழிந்து 1 டீஸ்பூன் வெந்நீரில் கலந்து குடித்தால் பசி எடுக்கும்.
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சைபழச்சாறு 3 பங்கு இவற்றுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பருகிவந்தால் பசியின்மை குறையும்.
கண்டங்கத்திரியின் பழத்தை காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளை அருந்தி வந்தால் நல்ல பசி எடுக்கும்.
முள்ளங்கிக் கீரை சாறில் மிளகை ஊற வைத்துப் பொடியாக்கி, அதிகாலையில் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசியின்மை குறையும்.
நல்லவேளைக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும் பசியின்மை குறையும்.