தலை
தலைபாரம் குணமாக
சிறுதேள் கொடுக்கு இலையுடன் நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி உடல், தலைக்கு தேய்த்து குளித்து வர குணமாகும்.
தலைபாரம் குணமாக
சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு ஆகியவற்றை பொடியாக்கி சேர்த்து துணியில் கட்டி நுகர தலைபாரம், மூக்கடைப்பு குணமாகும்.
நீர்க்கோர்வை குணமாக
நல்லவேளை செடியை இடித்து பிழிந்து சக்கையை தலையில் வைத்து கட்டினால் நீர்கோர்வை தீரும்.
தலைபாரம் சரியாக
இஞ்சி சாறு, பால், நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி தலைக்கு வாரம் ஒரு நாள் தேய்த்து குளிக்கலாம்.
தலைபாரம் குணமாக
விளக்கெண்ணெய் ஊற்றிய திரிவிளக்கில் விரலிமஞ்சளை சுட்டு வரும் புகையை சுவாசத்தால் தலைபாரம் குணமாகும்.
மண்டைக் கொதிப்பு குறைய
கோபுரந்தாங்கி இலைச்சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தலை முழுகி வந்தால் மண்டை கொதிப்பு குறையும்.
தலைவலி குறைய
பிரண்டை எண்ணெய்யை தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.வெட்டுகாயம் சீக்கிரம் ஆறும்.
தலைவலி குணமாக
மரிக்கொழுந்து செடியின் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலி உள்ள இடத்தில் வைத்துக்கட்ட வலி குணமாகும்.