தலைவலி குறைய
பருப்புக் கீரை இலைகளை அரைத்து சாறு எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
பருப்புக் கீரை இலைகளை அரைத்து சாறு எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்
துலுக்க சாமந்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்
கொடிப்பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதை தலை, நெற்றியில் தடவ தலைவலி குறையும்.
மணத்தக்காளி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.
பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி குறையும்.
முருங்கை இலைக் கொழுந்தை,தாய்ப்பால் விட்டரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைச்சுற்று குறையும்.