இருமல் குறைய
வெற்றிலைகளை எடுத்து சாறு எடுத்து அதனுடன் இஞ்சிச் சாறு சேர்த்து அருந்தி வந்தால் இருமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெற்றிலைகளை எடுத்து சாறு எடுத்து அதனுடன் இஞ்சிச் சாறு சேர்த்து அருந்தி வந்தால் இருமல் குறையும்.
வாலுழுவை சூரணத்தை தினமும் 3 வேளை 5, 7 குன்றி எடை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட இருமல் குறையும்.
மோரில் சிறிதளவு வெங்காயச்சாறு விட்டு குடிக்க அதிக சூட்டினால் உண்டாகும் வறட்டு இருமல் குறையும்.
திருநீற்றுப்பச்சிலைகளைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தினால் இருமல் மற்றும் மார்பு வலி குறையும்.
ஒரு டம்ளர் பாலில், ஒரு ஸ்பூன் தேன், மஞ்சள்தூள், மிளகு பொடி ஆகியவற்றை கலந்து அருந்தினால் வறட்டு இருமல் குறையும்.
வெந்தயக் கீரையுடன்,10 உலர்ந்த திராட்சை, அரை ஸ்பூன் சீரகம் இரண்டையும் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இருமல் குறையும்.
முசுமுசுக்கை இலைகளை உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து அதை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
அறுவதா உலர்ந்த இலையை நெருப்பிலிட்டு வரும் புகையை மென்மையாகச் சுவாசிக்க இருமல் குறையும்.