நகச் சுற்றுக் குறைய
நகச் சுற்றுக்கு எலுமிச்சை பழத்தை வைப்பதைக் கட்டிலும், ஒரு கரண்டி சுடுசோறு, மூன்று வெங்காயம் கொஞ்சமாக உப்பு ஆகிய மூன்றையும் அரைத்து...
வாழ்வியல் வழிகாட்டி
நகச் சுற்றுக்கு எலுமிச்சை பழத்தை வைப்பதைக் கட்டிலும், ஒரு கரண்டி சுடுசோறு, மூன்று வெங்காயம் கொஞ்சமாக உப்பு ஆகிய மூன்றையும் அரைத்து...
கற்றாழை சோற்றையும், மஞ்சள் பொடியையும் அரைத்து விளக்கெண்ணெய் விட்டு சூடுபடுத்தி லேசான சூட்டில் நகத்தின் மீது பூச நகச்சுற்று வலி குறையும்.
படிகாரத்தை நன்கு பொடி செய்து நீர்விட்டுக் கெட்டியாகக் குழைத்து நகத்தின் மீது வைத்துக் கட்டலாம்.
சிலந்தி நாயகம் இலையை நன்கு நீர்விடாமல் அரைத்து நகத்தில் கட்டினால் நகச்சுற்று குறையும்.
சிறிதளவு நொச்சி இலை, சிறிதளவு மருதாணி இலை, எருக்கன்பூ இரண்டு சேர்த்து நன்கு மைப்போல் அரைத்து நகத்தில் கட்டினால் நகச்சுற்று குறையும்.
மஞ்சள், அருகம்புல்,சிறிதளவு சுண்ணாம்பு இவைகளை கலந்து பூசி வர நகச்சுற்று குறையும்.
எலுமிச்சை பழத்தில் சிறு துவாரம் செய்து நகச்சுற்று உள்ள விரலில் புகுத்தி வைத்தால் நகச்சுற்று வலி குறையும்.
பத்து வேப்பிலையோடு, பத்து மிளகு சேர்த்து நீர் விட்டரைத்து விரலில் கட்டி, சிறிது உண்ண நகச்சுற்று குறையும்
கஸ்தூரி மஞ்சளை விளக்கெண்ணையுடன் கலந்து தட நகத்தைச் சுற்றி உள்ளபுண் குறையும்.
வேலிப்பருத்தி இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்றுக்கு பற்றிட நகச்சுற்று குறையும்.