மூட்டு வீக்கம் குறைய
கடுகுரோகிணி, ஆதண்டை வேர், சங்கன் வேர், புங்கன் வேர் ஆகியவற்றை இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். முடக்கொத்தான் சாறு, வெங்காயச்...
வாழ்வியல் வழிகாட்டி
கடுகுரோகிணி, ஆதண்டை வேர், சங்கன் வேர், புங்கன் வேர் ஆகியவற்றை இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். முடக்கொத்தான் சாறு, வெங்காயச்...
முருங்கைப் பட்டையை உடைத்து ஒன்றிரண்டாக பொடித்து, சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.
காசினிக்கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கல்லீரல் வீக்கம் குறையும்.
விராலி இலைகளை சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்கி வீக்கம் மீது கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
பொடுதலை இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி கட்டினால் வீக்கம் வடிந்து வீக்கத்தால் ஏற்படும் வலி குறையும்.
பப்பாளி இலைகளை எடுத்து அரைத்து வீக்கங்களின் மேல் பூசி வந்தால் வீக்கம் குறையும்.
கொடிப்பசலைக் கீரையை விளக்கெண்ணெய், மஞ்சள் சேர்த்து வதக்கி கட்டினால், வீக்கம், கட்டிகள் போன்றவை குறையும்
சுரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து வீக்கம் மீது பூசி வந்தால் வீக்கம் குறையும்.