மூக்கடைப்பு குறைய

வேங்கைப் பட்டை, சீந்தில்தண்டு, வில்வ வேர், சிற்றுமுட்டி வேர், வகைக்கு 8 படி இவைகளை இடித்து  8 மரக்கால் தண்ணீரில் போட்டு 12 நாளில் 1/8 ஆக வற்றும்படி தீபம் போல் எரித்து வடித்து அதில் நல்லெண்ணெய் 1 படி விட்டு அமுக்கிரான்வேர் பட்டை 3 பலம், சாதிக்காய், தக்கோலம், சண்பகப்பூ, விலாமிச்சம் வேர்,  வெட்டி வேர் வகைக்கு 1 வராகன் எடை பசும்பாலில் அரைத்துப் போட்டு அன்றாடம் ஒவ்வொரு தாழம் பூ மடலையும் போட்டு 5 நாள் வரையில் காய்ச்சி வடித்து அதில் புனுகு, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் வகைக்கு 1 வராகன் எடை பொடித்துப் போட்டு வைத்துக்கொண்டு நாசியில் நசியம் செய்து தலையில் தேய்த்து தலைமுழுக மூக்கடைப்பு தீரும்.

Show Buttons
Hide Buttons