வில்வம்பூவையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சாறெடுத்து அதனுடன் சிறிதளவு தேனையும் கலந்து தினம் இருவேளை அருந்தி வந்தால் கடுமையான காய்ச்சல், மலேரியா குணமாகும். →
மிளகரணை, துளசி செடிகளை வேருடன் பிடுங்கி அலசி இடித்து ஆமணக்கு எண்ணெய் விட்டு காய்ச்சி வாதவீக்கம் கண்ட இடத்தில் இத்தைலத்தை பூசி வர வாத வீக்கம் குணமாகும். →
15 துளசி இலை, 2 மிளகு, 2 சிறு வெங்காயம் ஆகியவற்றை அரைத்து சுடு நீரில் நெல்லிக்காய் அளவு கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும். →
ஐந்து கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சம அளவு மிளகையும் சேர்த்து அரைத்து அரைத்த கலவையை சுண்டக்காய் அளவு மாத்திரைகளாக செய்து பத்திரப்படுத்தவும்.காலையில் தினமும் ஒவ்வொரு மாதிரியாக விழுங்கி வந்தால் காலரா குணமாகும். →