ஆறாத புண் குறைய
ரோஜா பூவை எடுத்து கஷாயம் செய்து ஆறாத புண்களை கழுவி வந்தால் உடலில் ஆறாத புண் குறைந்து சதை வளரும்.
புண்கள் குறைய
உதிரமர இலையை எடுத்து நன்கு அரைத்து புண்கள் மீது பற்று போட்டு வந்தால் எல்லாவிதமான புண் புரைகளும் குறையும்.
தீப்புண்கள் குறைய
முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து இலேசாக அடித்து கலக்கி தீப்புண்கள் மீது தடவி வந்தால் தீப்புண்கள் மற்றும் எரிச்சல் குறையும்.
தீப்புண் குறைய
வேப்பங்கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்துத் தீப்பட்ட புண்களின் மீது பூசிவந்தால் தீப்புண் குறையும்.
தீப்புண் குறைய
குப்பைமேனி இலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து புண்மேல் தடவி வந்தால் தீப்புண் குறையும்.
மஞ்சள் காமாலை
சிறிதளவு பாகற்க்காயை உணவிலோ அல்லது பாகற்க்காய் சாறை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலைக் குணமாகும்.
மஞ்சள் காமாலை
சிறிதளவு முள்ளங்கி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலைக் குணமாகும்.
மஞ்சள் காமாலை
சிறிதளவு வேப்பிலையை இடித்து அதை சாறு பிழிந்து கொடுக்கவும் . பின்பு உப்பில்லாத பத்தியம் இருந்தால் மஞ்சள் காமாலைக் குணமாகும்.
மஞ்சள் காமாலை நோய் குணமாக
தும்பை இலைகளை அரைத்து மோரில் கலந்து சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும்.