ஜீரண சக்திக்கு
சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்தால் ஜீரணமாகி விடும்.
வாழ்வியல் வழிகாட்டி
சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்தால் ஜீரணமாகி விடும்.
பப்பாளிப் பழத்தை தினமும் சிறு அளவு மட்டும் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி பெருகும்.
வல்லாரை, வசம்பு பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட ஞாபகசக்தி பெருகும். வல்லாரை கீரையை அடிக்கடி சமைத்து உண்டு வந்தாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.
வல்லாரைக்கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
வல்லாரைப் பொடியை தேனுடன் அல்லது தண்ணீருடன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஞாபக சக்தி வளரும்.
தூதுவளை பொடியை தினமும் உணவுக்கு பின் காலை, மாலை சாப்பிட்டு வர ஞாபக சக்தி வளறும்.
தூதுவளை, வல்லாரை, கறிவேப்பில்லை ஆகியவற்றை பொடி செய்து உணவுடன் கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
வெள் எருக்கம் பூ 1 பங்கு, கிராம்பு ½ பங்கு இவற்றை வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட ஒவ்வாமை தீரும்.