கண்பார்வை அதிகரிக்க
தான்றிக்காய் தோலை உரித்துப் பொடி செய்து சிறிதளவு தேனில் குழைத்துக் காலையில் சாப்பிட்டுவர கண்பார்வை அதிகரிக்கும்.
கண் பார்வை தெளிவடைய
கரிசலாங்கண்ணி இலை சாறு எடுத்து அதனுடன் பாசிப்பயறு சேர்த்து வேகவைத்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
கண் சிவப்பு மறைய
ஆடாதோடா விதை, கடுக்காய், நெல்லிக்காய் விதை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் கண் சிவப்பு மறையும்.
கண் பார்வை தெளிவடைய
பாதாம் பருப்பை வறுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
கண் பார்வை தெளிவடைய
இரவில் படுக்கும் முன் கண்களை சுற்றியும், உள்ளங்கால்களிலும் விளக்கெண்ணெயை தடவிவந்தால், உடல்சூடு தணிந்து கண் பார்வை தெளிவாகவும், பிராகாசமாகவும் தெரியும்.
வாய் நாற்றம் குணமாக
கரும்புச் சாற்றில் ரோஜா இதழ்களை அரைத்து சாப்பிட்டு வர வாய் நாற்றம் குணமாகும்.
வாய் கசப்பை நீக்க
எலுமிச்சை சாற்றில் இஞ்சியை ஊற வைத்து தினமும் அதை மென்று சாப்பிட்டு வர வாய் கசப்பு நீங்கும்.
வாய் துர்நாற்றம் நீங்க
எலுமிச்சை பழச்சாறை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
கண்பார்வை பாதிப்பு குறைய
வல்லாரை இலைகளை நன்கு அரைத்துப் பாலில் கலந்து அருந்தி வந்தால் கண்பார்வை பாதிப்பு குறையும்.