மரசாமான்கள் பளபளக்க
கற்பூர எண்ணெய், ஆளி விதை, வினிகர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து சுத்தமான துணியால் இந்தக் கலவையை நனைத்து துடைத்தால்...
வாழ்வியல் வழிகாட்டி
கற்பூர எண்ணெய், ஆளி விதை, வினிகர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து சுத்தமான துணியால் இந்தக் கலவையை நனைத்து துடைத்தால்...
பிரம்பு நாற்காலிகள் மஞ்சள் நிறமாக காணப்பட்டால் அரை லிட்டர் தண்ணீரில் அரை ஸ்பூன் ஆக்ஸாலிக் ஆசிட் கரைத்துத் தேய்த்து காய விடவும்....
பிரம்புச் சாமான்களை எலுமிச்சைச்சாறு கொண்டு துடைத்தால் அவை புதுப்பொலிவுடன் இருக்கும்.
மீன் வாடை நீங்க சீகைக்காய் தூளையும், புளியையும், சேர்த்துப் பாத்திரத்தைத் தேய்க்கவும். அதே போல் கையை உப்பைக்கொண்டு கழுவினால் மீன் வாடை...
மண்ணெண்ணெய் வாடை போகச் சிறிது தயிர் எடுத்துக் கையில் தடவிப் பின்பு சோப்புப் போட்டுக் கழுவினால் போய்விடும்.
தந்ததினால் செய்தபொருள் கறுத்து போகாமல் இருக்க அடிக்கடி காய்ச்சிய பாலில் துடைக்க வேண்டும்.
லாக்கரில் அல்லது இரும்புப் பெட்டியில் வெள்ளிச்சாமன்களை வைக்கும் போது மெல்லிய பிளைவுட் பெட்டியில் வைத்து உள்ளே வைத்தால் கறுக்காது.
வெள்ளிப் பாத்திரத்தில் கொஞ்சம் கற்ப்பூரத்தைப் போட்டு வைத்தால் பாத்திரங்கள் கறுத்துப் போகாமல் இருக்கும்.
அவசரத்துக்கு வெள்ளியினாலான பொருள்களை பளபளப்பாக்க வேண்டுமானால் கொஞ்சம் டூத் பேஸ்டை தேய்த்து துணியினால் துடைத்தால் கருப்பு மறைந்து விடும்.