நகச்சுற்று குறைய
சிலந்தி நாயகம் இலையை நன்கு நீர்விடாமல் அரைத்து நகத்தில் கட்டினால் நகச்சுற்று குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சிலந்தி நாயகம் இலையை நன்கு நீர்விடாமல் அரைத்து நகத்தில் கட்டினால் நகச்சுற்று குறையும்.
சிறிதளவு நொச்சி இலை, சிறிதளவு மருதாணி இலை, எருக்கன்பூ இரண்டு சேர்த்து நன்கு மைப்போல் அரைத்து நகத்தில் கட்டினால் நகச்சுற்று குறையும்.
மஞ்சள், அருகம்புல்,சிறிதளவு சுண்ணாம்பு இவைகளை கலந்து பூசி வர நகச்சுற்று குறையும்.
எலுமிச்சை பழத்தில் சிறு துவாரம் செய்து நகச்சுற்று உள்ள விரலில் புகுத்தி வைத்தால் நகச்சுற்று வலி குறையும்.
பத்து வேப்பிலையோடு, பத்து மிளகு சேர்த்து நீர் விட்டரைத்து விரலில் கட்டி, சிறிது உண்ண நகச்சுற்று குறையும்
கஸ்தூரி மஞ்சளை விளக்கெண்ணையுடன் கலந்து தட நகத்தைச் சுற்றி உள்ளபுண் குறையும்.
வேலிப்பருத்தி இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்றுக்கு பற்றிட நகச்சுற்று குறையும்.
வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து நகச்சுற்றுக்கு பூச நகச்சுற்று குறையும்.
படிகாரத்தைப் பொரித்து நீர்விட்டுக் கெட்டியாகக் குழைத்து நகச்சொத்தையின் மீது வைத்து கட்டினால் நகச்சொத்தை குறையும்.