வாந்தி குறைய
வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து வெந்நீருடன் கலந்து குடித்தால் வாந்தி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து வெந்நீருடன் கலந்து குடித்தால் வாந்தி குறையும்.
மந்தாரை மலரின் மொட்டுகளை பொடியாக நறுக்கி கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து கொடுக்க வாந்தி குறையும்.
புதினாக்கீரை சாறும் ,சர்க்கரையும், தேவையானஅளவு சீமைகாடியும் விட்டு கலக்கி அடுப்பில் வைத்து காய்ச்சி பதமாக்கி வைத்து சாப்பிட வாந்தி குறையும்.
அதிமதுரத்துடன் சுக்கு சேர்த்து பொடியாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி குறையும்.
எலுமிச்சை பழம் அல்லது வெங்காயத்தை எடுத்து ஒன்று இரண்டாக தட்டி எடுத்து அதை தொடர்ந்து முகர்ந்து பார்க்க வாந்தி குறையும்.
முசுமுசுக்கைக் கீரை சாற்றில் உலர்ந்த திராட்சையை அரைத்து சாப்பிட்டால் வாந்தி குறையும்.
ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் கலந்து குடிக்க வாந்தி குறையும்
முளைக்கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்து சாப்பிட்டால் ருசியின்மை குறையும்.