மாதுளம் பழத்தோலை சிறுசிறு துண்டுகளாக்கி நன்கு 2 நாட்கள் வெயிலில் உலர வைத்து பொடி செய்து டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும். இரவில் சாப்பிட்ட பிறகு பால் அல்லது வெந்நீரில் 1/2 ஸ்பூன் மாதுளம் பழத்தோல் பொடியை கலந்து சாப்பிடவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.