நெருஞ்சில் விதை 300 கிராம், கோதுமை 500 கிராம், கொத்த மல்லி 100 கிராம், சுக்கு 50 கிராம் ஏலம் 10 கிராம் சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து வைக்கவும். இத்தூளை கொதி நீரில் போட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம். உடலுக்கு ஊட்டம் தருவதோடு எதிர்ப்பாற்றலும் குளிர்ச்சியும் பெருகும்.