குழந்தைக்கு கணைரோகத்தில் ஏற்படும் கழிச்சல் நோயாகும். கணைரோகக் குறிகள் காணும். சுரம் லேசாக இருக்கும். கைகால் குளிரும். மலம் தண்ணீர் போன்றும், தயிர்கட்டிகளை போலும், சளிக் கலந்தும் காணும்.
மருந்து 1
வெந்தயம் – 5 கிராம்
சீரகம் – 15 கிராம்
வெங்காயம் – 75 கிராம்
கருவேலம் ஈர்க்கு – 30 கிராம்
இவற்றை பொடி செய்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் காலை, மாலை ஒரு அவுன்சு வீதம் கொடுக்க வேண்டும்.
மருந்து 2
நாரத்தை ஈர்க்கு – 15 கிராம்
நெல்லி ஈர்க்கு – 15 கிராம்
புளிய ஈர்க்கு – 15 கிராம்
இலந்தை ஈர்க்கு – 15 கிராம்
பூண்டு – 15 கிராம்
ஒன்று சேர்த்து பொடி செய்து அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் காலை, மாலை ஒரு அவுன்சு வீதம் கொடுக்க வேண்டும்.