குழந்தைக்கு சுரமுடன் மயிர்க்கூச்சல் உண்டாகும். வயிறு பொருமி பால் கட்டிகட்டியாகக் கழியும். வயிறு பொருமி குழந்தை ஓயாமல் அழும். மலம் புளிப்பு நாற்றம் அடிக்கும். கண் குழி விழும். தொண்டையில் கோழை கட்டி, திக்கு முக்காடும். வாந்தி உண்டாகும்.
இந்த குறிகளோடு குழந்தை சுவாசிக்கும் போது நெஞ்சு உயர்ந்தும், நெஞ்சுக் குழி பள்ளமாயும், பக்க விலாக்களில் பள்ளமாயும் இருக்கும். இதற்கு அள்ளுமாந்தம் என்று பெயர்.
மருந்து
பூண்டு – 10 கிராம்
மிளகு – 10 கிராம்
வசம்பு – 10 கிராம்
பொடுதலைக்காய் – 10 கிராம்
இந்துப்பு – 10 கிராம்
ஒரு படி தண்ணீரில் தட்டிப்போட்டு, கால் லிட்டராக சுண்டக் காய்ச்சிய கியாழத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் காலை, மாலை கொடுத்து வரவேண்டும்.