பின்னலாக இருந்தாலும் கொண்டையாக இருந்தாலும் கூந்தலின் அடிப்பகுதியை இறுக்கமாக கட்டக்கூடாது.இவ்வாறு செய்வதன் மூலம் தலையின் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு முடி உதிர்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படும். மேலும் கூந்தலை கட்டுவதற்கு ரப்பர் பாண்டு எனப்படும் ரப்பர் வளையத்தை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள சிலவகை ரசாயனப் பொருட்கள் கூந்தலை ஏற்றுவிட செய்யும்.