காவளை, பசலி, சஸ்போனியா, டேஞ்சா, சனப்பு மற்றும் உளுந்து, காராமணி போன்றவற்றையும் இடத்திற்கு ஏற்ப பசுந்தாள் உரமாக பயன்படுத்தலாம். இவற்றில் நம் ஒருங்கிணைந்த காவானை, பசலி, சஸ்போனியா,டேஞ்சா, சனப்பு முதலியவற்றைத் தனிப் பயிராக விதைத்து மடக்கி உழுவது சிறந்தது. நேரடி நெல் விதைப்பின் பூசி நெல்லுடன் ஏச்கருக்கு ஒன்றரை கிலோ என்ற அளவில் விதைத்தோமானால் தண்ணீர் இல்லாத போதும் நெற்பயிர் வறட்சியை தங்கி வளரும். தண்ணீர் வந்தவுடன் வயலில் தண்ணீர் நிறுத்திவிட்டால் இவை இயல்பாக அழுகிவிடுவதால் நெற்ப்பயிருக்கு நல்ல உரமாகவும் மேலும் களை முளைப்பதையும் குறைத்துவிடும். அவரவர் பகுதிக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வது சிறந்த பயனாகும்.