தேவையான பொருட்கள் :
1.வேம்பு கொட்டை பவுடர் -1 கிலோ
2.பசு தயிர் -2 லிட்டர்
3.பசு கோமியம் -3 லிட்டர்
4.கடுக்காய் தூள் -10 கிராம்
5.அதிமதுரம் தூள் -10 கிராம்
செய்முறை:
வேம்பு கொட்டை பவுடருடன் 5 லிட்டர் நீர் சேர்த்து 12 மணி நேரம் ஊற வைக்கவும் .பின் ,கடுக்காய் தூள் ,அதிமதுரம் தூள் சேர்த்து உடன் பயன்படுத்தலாம் .
பயன்படுத்தும் முறை :
1 லிட்டர் கலவையுடன் 10 லிட்டர் நீர் சேர்த்து கை தெளிப்பான் மூலம் பூ பூக்கும் தருணத்திற்கு பின் வாரம் ஒருமுறை தெளிப்பது மிகுந்த பலனை தரும் .
இதே முறையில் கலந்து மரம் அல்லது செடியின் தூரிலும் ஊற்றலாம் .நன்கு காய் பிடித்து லாபகரமான விளைச்சலை பெறலாம் .