தேவையான பொருட்கள்:
1. 50 லிட்டர் பிளாஸ்டிக் கேன்-1
2. சாணம்
3. புளித்த பசு தயிர்
4. மக்கிய குப்பை
5. கூழாங்கற்கள்
செய்முறை :
பிளாஸ்டிக் கேன் மேல் பாகத்தை அறுத்து எடுத்து கொண்டு கீழ் பாகத்தில் 4 இன்ச் உயரத்தில் சிறு துளை செய்து அதில் நீர் வெளியேறுமாறு ஒரு அமைப்பை ஏற்ப்படுத்தி கொள்ளவும். அதன் மேல் கெட்டியான நைலான் வலையை கொண்டு பரப்பி அதன் மேல் தோட்டத்து மண் 3 இன்ச் உயரத்திற்கு இடவும். அதன் மேல் மக்கிய குப்பைகளை 4 இன்ச் உயரத்திற்கு இடவும். அதன் மேல் பசு சாணம், புளித்த தயிர் இரண்டையும் தண்ணீர் சேர்த்து தெளி சாணம் அளவிற்கு கரைத்து கொண்டு இக்கரைசலை மக்கிய குப்பைகள் நன்கு நனையுமாறு பரவலாக தெளிக்கவும்.
பின் மீண்டும், மீண்டும் தொழு உரம் 4 இன்ச் அதன் மேல் கரைசல் இதே அளவில் கேனில் முக்கால் பாகம் வரும்வரை இட்டு நிரப்பவும். சுமார் 1000 மண் புழுக்களை இதே கேனில் இடவும். புழுக்கள் எருவிற்குக் கீழ்ச் சென்றவுடன் செங்கல் பரப்பி அதன்மேல் துளித்துளியாய் நீர் இறங்குமாறு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு பெரிய கேனில் நீர் வெளியேறும் அமைப்பின் முலம் வடியும் நீரை எடுத்து 1 லிட்டர் மண்புழு குளியல் நீருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்து கலந்து கைத் தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.