மிளகு, சுக்கு, திப்பிலி, வால்மிளகு, பூண்டு, சீரகம், ஓமம் மற்றும் பெருங்காயம் சேர்த்து இடித்து பொடி செய்து கொள்ளவும். பிறகு வாணலியில் நெய் காய்ந்தவுடன் சிறிது பனைவெல்லத்தை போட்டு பாகு பதத்திற்கு வரும் போது அந்த பொடியை சேர்த்து கிளறவும். லேகியப் பதத்திற்கு வந்ததும் இறக்கவும். இந்த லேகியத்தை சாப்பிட்டு வந்தால் வாய்வு சம்பந்தப்பட்ட கோளாறுகள் குறையும்