ஒரு பிடி வேப்ப இலையின் ஈர்க்கு எடுத்து அதனுடன் ஒரு பிடி நாரத்தை ஈர்க்கு, சிறிது இஞ்சி, 10 மிளகு, சிறிது மஞ்சள் துண்டு இவைகளைத் தட்டிப் போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1 டம்ளராக வரும் வரை சுண்டக் காய்ச்சி அதை வடிகட்டி 3 பாகமாக செய்து காலை, மதியம், மாலை ஆகிய 3 வேளையும் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.