இரைப்பிற்கான‌ சூரணம்

தேவையான பொருள்கள்:

  1. திப்பிலி = 100 கிராம்
  2. சிவனார் வேம்பு = 50 கிராம்
  3. சுக்கு = 25 கிராம்
  4. மிளகு = 25 கிராம்
  5. சித்திரமூல வேர்ப்பட்டை = 25 கிராம்
  6. சிவகரந்தை முழுச்செடி = 50 கிராம்
  7. அதிமதுரம் = 25 கிராம்

செய்முறை:

  • திப்பிலியை சுத்தம் செய்து கொள்ளவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி கொள்ளவும்.
  • சிவனார் வேம்பை ஒன்றிரண்டாக இடித்து மண் பாத்திரத்தில் போட்டு 500 மி.லி பசும்பாலை ஊற்றி பால் சுண்டும் வரை காய்ச்சி எடுத்து சிவனார் வேம்பை தூய நீர் விட்டு கழுவி நிழலில் உலர்த்தவும்.
  • சித்திரமூல வேரை பச்சையாக கொண்டு வேரின் பட்டையை மட்டும் தட்டி எடுத்து நிழலில் உலர்த்தவும். பின்பு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 250 மி.லி பசும்பாலை ஊற்றி பால் சுண்டும் வரை காய்ச்சி எடுத்து நிழலில் உலர்த்தவும். மீண்டும் மண் பாத்திரத்தில் போட்டு 250 மி.லி இளநீரை விட்டு நீர் சுண்டும் அள‌வுக்கு காய்ச்சி எடுத்து நிழலில் உலர்த்தி மீண்டும் மண் பாத்திரத்தில் போட்டு 100 மி.லி நெய்யை விட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து  கொள்ளவும்.
  • சிவகரந்தை முழுச்செடியை பச்சையாக கொண்டு வந்து நிழலில் உலர்த்தி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  • அதிமதுரத்தை ஒன்றிரண்டாக உடைத்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி இளநீரை ஊற்றி நீர் சுண்டும் வரை காய்ச்சி எடுத்து நிழலில் உலர்த்தவும்.

எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து சலித்து மண் பாத்திரத்தில் போட்டு கண்ணாடி தட்டால் மூடி 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து சாப்பிட்டு வரவும்.

உபயோகிக்கும் முறை:

  • இந்த சூரணத்தை காலை 6 மணிக்கு அரை தேக்கரண்டி, மாலை அரை தேக்கரண்டி அளவு 7 நாட்கள சாப்பிட்டு வரவும்.

 

Show Buttons
Hide Buttons