செந்தாமரை இதழ்களை வெயிலில் காயவைத்து இடித்து சலிக்கவும். இதோடு சீந்தில்கொடி, நெல்லிபருப்பு , காசினி விதை இவைகளை 30 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். 15 கிராம் சுக்கு, 10 கிராம் திப்பிலி எல்லாவற்றையும் வெயிலில் காயவைத்து இடித்து தூளாக்கி முன்பு பொடி செய்த செந்தாமரை பொடியுடன் கலந்து கொள்ளவும். 3/4 லிட்டர் பாலை பாத்திரத்திலிட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்தவுடன் அதில் 700 கிராம் சர்க்கரையை போட்டு கலக்கவும். நன்றாக கரைந்த பின்னர் முன்பு தயார் செய்த பொடியை போட்டு கிளறவும். பின்னர் 1/4 கிலோ சுத்தமான நெய்யை விட்டு கிளறவும். பின்னர் 1/4 கிலோ சுத்தமான தேனை சேர்த்துக் கலக்கி இறக்கவும். பின்பு பாத்திரத்தை இறக்கி ஆறியதும் கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்தி இந்த லேகியத்தை வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான நோய்கள் அகலும். இதயம் வலுப்பெறும்.