ஓரிதழ் தாமரை இலைகளையும், மலரையும் எடுத்துக்கொள்ளவும். பழகிய சுத்தமான மண்சட்டியில் 700 மிலி பசும் பால் விட்டு சுத்தமான வெள்ளை துணியால் கட்டிக்கொள்ளவும்.தேவையான அளவு ஓரிதழ் தாமரை மலரையும், இலைகளையும் மண் சட்டியில் கட்டப்பட்டிருக்கும் துணியின் மீது வைத்து மற்றொரு மூடியால் மூடி அடுப்பில் வைத்து அவிக்கவும். அவித்த பிறகு அதை எடுத்து வெயிலில் நன்றாக காய வைத்து இடித்து தூளாக்கி சல்லடையில் சலித்து கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தவும். அன்றாடம் ஒரு தேக்கரண்டி அளவு தினமும் இரு வேளை இப்பொடியை வாயில் போட்டுபால் அருந்தவும். தாது புஷ்டி, உடல் வலிமை, ஆண்மை பெருக்கம் முதலானவை உண்டாகும்.