அராமிக் கோந்து 50 கிராம் அளவு,பின்பு சாந்தில் சேர்க்க வேண்டிய விருப்பமான வண்ணம் சிறிதளவு, வாசனை திரவியம், ஆல்கஹால் முக்கால் அவுன்ஸ் ஆகியவற்றை வாங்கவும். கோந்தை சுடு நீரில் கரைத்து பின் சுத்தமான துணியினால் வடிகட்டி கொள்ளவும். வாசனை சென்ட்டை ஆல்கஹாலில் விட்டுக் கலந்து முன்பு தயார் செய்து வைத்திருக்கும் கரைசலுடன் சேர்த்துக் கொள்ளவும். இப்போது சாந்து தயார். இதனை காற்று புகாத கண்ணாடிப் புட்டிக்குள் மூடி வைத்திருந்து பயன்படுத்தலாம்.