பூவரசுஇலை (Portiatreeleaf)
வீக்க மாந்தம்
குழந்தை சுரத்துடன் மாந்தத்தின் அறிகுறிகள் எல்லாம் காணும். கண்ணும் காதும் வீங்கி இருக்கும். உதடு, நாக்கு , வாய் முதலியவைகள் புண்பட்டிருக்கும்....
கரப்பான் குறைய
பூவரசு இலைகளைச் சுட்டுச் சாம்பலாக்கி, தேங்காய் எண்ணெயில் குழைத்து கரப்பான் மற்றும் சொறி மேல் பூசி வந்தால் இவை குறையும்.
வீக்கம் குறைய
பூவரசு இலைகளைப் பொடியாக்கி,வேப்பெண்ணெய் விட்டு வேக வைத்து இளஞ்சூட்டில் வீக்கங்கள் மேல் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறைந்து விடும்.
மஞ்சள் காமாலை குறைய
பூவரச மரத்தின் பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.
சொறி சிரங்கு குறைய
பூவரச மரத்தின் பழுப்பு இலைகளை வெயிலில் காயவைத்து, தீயில் சாம்பலாக்கி, அதைத் தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசிவர சொறி சிரங்கு குறையும்.
வீக்கம் குறைய
பூவரசு இலைகளை எடுத்து நல்லெண்ணையில் வதக்கி வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வந்தால் வீக்கம் குறையும்
தேமல் குறைய
பூவரச மரத்தின் முற்றிய இலைகளை எடுத்து காயவைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து தேமல் மீது பூசினால் தேமல் குறையும்.
மஞ்சள் காமாலை குறைய
பூவரச மரத்தின் பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.