வியர்வை நாற்றம் குறைய
திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, பொடி கலந்து தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, பொடி கலந்து தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் குறையும்.
திருநீற்றுப் பச்சிலை சாற்றுடன் கற்பூரவல்லிச் சாறு சேர்த்து தடவி வர தோல்அரிப்பு குறையும்.
திருநீற்றுப்பச்சிலையை இடித்து சாறு பிழிந்து எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வாயு குறையும்.
திருநீற்றுப்பச்சிலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நீரில் கலந்து அருந்தினால் வாந்தி குறையும்.
திருநீற்றுப் பச்சிலை விதைகளை, தண்ணீருடன் கலந்து அந்த சாறை சிறு அளவில் ஒரு வாரம் சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.
திருநீற்றுப்பச்சிலைகளைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தினால் இருமல் மற்றும் மார்பு வலி குறையும்.
தேமலை வெந்நீரால் சுத்தம் செய்து கற்பூரவல்லி இலை மற்றும் திருநீற்றுப்பச்சிலை இரண்டையும் கசக்கி நன்றாக தேய்த்து வந்தால் தேமல் குறையும்.
திருநீற்றுப்பச்சிலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாயில் ஏற்படும் புண் குறையும்.