மண்புழு உரம்
தேவைப்படும் பொருட்கள் : 5,12,2.5 அடி அகலம், நீளம், உயரம், உள்ளவாறு தொட்டி அமைக்கப்பட வேண்டும். தொட்டியின் அடியில் நீர் வெளியேற...
வாழ்வியல் வழிகாட்டி
தேவைப்படும் பொருட்கள் : 5,12,2.5 அடி அகலம், நீளம், உயரம், உள்ளவாறு தொட்டி அமைக்கப்பட வேண்டும். தொட்டியின் அடியில் நீர் வெளியேற...
மண்ணெண்ணெய் வாடை போகச் சிறிது தயிர் எடுத்துக் கையில் தடவிப் பின்பு சோப்புப் போட்டுக் கழுவினால் போய்விடும்.
தயிர் தயாரிக்க மோர் இல்லாவிட்டால் எலுமிச்சைச்சாறு பிழிந்தால் போதுமானது.
புது செருப்பு, ஷு உட்புறம் புளித்த தயிரை இரவில் தடவி வைத்துக் காலையில் துடைத்து விட்டால் தோல் மிருதுவாகிவிடும்.
குளிர்காலத்தில் பாலில் மோர் ஊற்றியதும் கொஞ்சம் புளியை எடுத்து உருண்டையாக உருட்டி அதில் போட்டால் கெட்டியான தயிர் ரெடி.
பக்கோடா மொர மொரப்பாக இருக்க மாவைக் கலக்கும் போது சிறிதளவு நெய்யும் உப்பிட்ட தயிரும் கலந்து கொண்டால் போதும்.
கத்தரிக்காய் எண்ணெய் கறிக்கு வதக்கும் போது ஒரு ஸ்பூன் கட்டி தயிரை அதில் விட்டால் கத்தரிக்காய் கருப்பாக ஆகாமல் இருக்கும்.
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது கடலைமாவைப் புளித்த தயிரில் கலந்து சேப்பங்கிழங்குடன் சேர்த்து செய்தால் மொரு மொரு வென்று இருக்கும்.
சிறிதளவு அம்மான் பச்சரிசி இலையை அரைத்து தயிருடன் கலந்து காலையில் சாப்பிட்டால் தேககாந்தல்,மலச்சிக்கல் குறையும்.