தோல்அரிப்பு குறைய
திருநீற்றுப் பச்சிலை சாற்றுடன் கற்பூரவல்லிச் சாறு சேர்த்து தடவி வர தோல்அரிப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
திருநீற்றுப் பச்சிலை சாற்றுடன் கற்பூரவல்லிச் சாறு சேர்த்து தடவி வர தோல்அரிப்பு குறையும்.
கீழாநெல்லி இலை, வேர், காம்பு, மிளகு(9) இவற்றை தண்ணீர் விட்டு காய்ச்சி தினமும் குடிக்க உடல் அரிப்பு குறையும்.
சுடுசாதத்தையும்,மஞ்சளையும் அரைத்து அரிப்பு உள்ள இடத்தில் தடவி வர அரிப்பு குறையும்.
கசகசா , கருஞ்சீரகம், தென்னம் பூ இவைகளை நன்றாகக் அரைத்துத் தினமும் தேய்த்துக் குளித்து வர அரிப்பு குறையும்.
ஆவாரம் பூ அரைத்து பயித்த மாவுடன் கலந்து தினமும் உடலில் தடவி 20 நிமிடம் கழித்து குளிக்க உடல் அரிப்பு குணமாகும்.
அருகம்புல், மிளகு, வெற்றிலை மூன்றையும் காய்ச்சி அந்த நீரை இரவு குடித்து வந்தால் தோல் அரிப்பு நீங்கும்.
நல்லெண்ணெய், வெங்காயச்சாறு, புளிய இலை சாறு மூன்றையும் சாப்பிட்டால் உடல் அரிப்பு குறையும்.
துவரம் பருப்பை வேக வைத்து அதனுடன் அத்திக்காயை சமையல் செய்து சாப்பிட்டால் உடல் அரிப்பு நீங்கும்.
மருதாணி எண்ணையை சருமத்தில் தடவி வந்தால் அரிப்பு நீங்கி பரிபூரண குணம் கிடைக்கும்