மொறுமொறுப்பாக இருக்க
பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றை ஒரு பாலிதீன் பாக்கெட்டில் போட்டு வைத்தால் அதிக நாள் மொறுமொறுப்பாக இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றை ஒரு பாலிதீன் பாக்கெட்டில் போட்டு வைத்தால் அதிக நாள் மொறுமொறுப்பாக இருக்கும்.
வத்தல், அப்பளங்களை வெயிலில் காய வைக்கும் போது காக்கைகள் தொந்தரவு வராமல் இருக்க கருப்புத் துணியையோ அல்லது குடையையோ வைக்க வேண்டும்.
சிறிதளவு பெருங்காயத்தை அப்பளம் வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வைத்திருந்தால் அப்பளம் நீண்ட நாட்களுக்கு கெடாமலிருக்கும்.
வறுவல், சிப்ஸ், அப்பளம் போன்றவற்றைப் பொரித்தவுடன் மூடி விடக் கூடாது. அவ்வாறு செய்தால் விரைவாக நமத்து போய்விடும். சிறிது நேரம் கழித்து...
அப்பளத்தின் இருபுறமும் லேசாக கொஞ்சம் எண்ணெய் தடவி அப்பளத்தை தணலில் சுடவும். அப்பளம் எண்ணெய்யில் பொரித்தது போலவும், அதிக சுவையோடும் இருக்கும்.
வெந்தயக்குழம்பு கொதிக்கும் போது இரண்டு உளுந்து அப்பளங்களைப் பொரித்து நொறுக்கிப் போட்டுக் குழம்பை இறக்கவும்.