தீப்புண் குறைய
மாசிக்காய், இதனை தண்ணீர் விட்டு அரைத்து தீப்புண்ணிற்கு தடவிவர தீப்புண் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாசிக்காய், இதனை தண்ணீர் விட்டு அரைத்து தீப்புண்ணிற்கு தடவிவர தீப்புண் குறையும்.
புங்க எண்ணெய்யை லேசாக சூடாக்கி தீய்க்காயங்கள் மீது பூசி வர தீப்புண் குறையும்
வேப்பம்பட்டையை எடுத்து நன்கு இடித்து கஷாயமாக்கி காய்ச்சி தீக்காயங்கள் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்
அவுரி இலையை அரைத்து தீப்புண், தீயினால் ஏற்பட்ட கொப்புளங்கள் மீது பூச தீப்புண் குறையும்
புளியமரத்தின் சொற சொறத்த பட்டையை நன்கு பொடி செய்து பாலுடன் கலந்து தடவி வந்தால் ஆறாத புண் குறையும்
நாயுருவி செடியை சுத்தம் செய்து இடித்து பிழிந்து அதை துணியில் வைத்து புண்ணின் மீது கட்டி வந்தால் புண் குறையும்.
உருளைக்கிழங்கை சாறு எடுத்து தீப்புண்களில் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்.
ரோஜா பூவை எடுத்து கஷாயம் செய்து ஆறாத புண்களை கழுவி வந்தால் உடலில் ஆறாத புண் குறைந்து சதை வளரும்.