தீப்புண் ஆற
புளியம் மரத்துப் பட்டையை மென்மையாகப் பொடி செய்து புண் மேல் தூவி தேங்காய் எண்ணெய் விட்டு வர தீப்புண் ஆறும்.
வாழ்வியல் வழிகாட்டி
புளியம் மரத்துப் பட்டையை மென்மையாகப் பொடி செய்து புண் மேல் தூவி தேங்காய் எண்ணெய் விட்டு வர தீப்புண் ஆறும்.
அவரை இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடியை சேர்த்து விளக்கெண்ணெயில் குழப்பி புண்களில் பூசி வந்தால் புண் குறையும்.
அல்லி இலையை நீர் விட்டுக் காய்ச்சி தீப்புண்களைக் கழுவினால் தீப்புண் குறையும்.
உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் குறையும்
கல்லுப்பு சிறிது எடுத்து தீப்புண் மீது தடவ தீப்புண் கொப்புளம் குறையும்.
மா இலைகளை உலர்த்தி காய வைத்து எரித்து சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்துத் தீப்புண்கள் மேல் பூசினால் புண்கள் குறையும்.