December 5, 2012
ஆறாத புண் குறைய
ரோஜா பூவை எடுத்து கஷாயம் செய்து ஆறாத புண்களை கழுவி வந்தால் உடலில் ஆறாத புண் குறைந்து சதை வளரும்.
வாழ்வியல் வழிகாட்டி
ரோஜா பூவை எடுத்து கஷாயம் செய்து ஆறாத புண்களை கழுவி வந்தால் உடலில் ஆறாத புண் குறைந்து சதை வளரும்.
உதிரமர இலையை எடுத்து நன்கு அரைத்து புண்கள் மீது பற்று போட்டு வந்தால் எல்லாவிதமான புண் புரைகளும் குறையும்.
முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து இலேசாக அடித்து கலக்கி தீப்புண்கள் மீது தடவி வந்தால் தீப்புண்கள் மற்றும் எரிச்சல் குறையும்.
வேப்பங்கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்துத் தீப்பட்ட புண்களின் மீது பூசிவந்தால் தீப்புண் குறையும்.
குப்பைமேனி இலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து புண்மேல் தடவி வந்தால் தீப்புண் குறையும்.
30 மில்லி தேங்காய் எண்ணெயுடன், 50 மில்லி தெளிந்த சுண்ணாம்பு நீரைக் கலந்து தீப்புண்ணின் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்.