சிறுநீர்க்கட்டு குணமாக
செம்பருத்தி பூவை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து பனங்கற்கண்டு பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்க்கட்டு குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
செம்பருத்தி பூவை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து பனங்கற்கண்டு பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்க்கட்டு குணமாகும்.
சந்தனக்கட்டையை பாலில் உரைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் பாதை ரணம் தீரும்.
கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு கலந்து குடிக்க சிறுநீர் நன்றாக பிரியும்.
அருகம்புல் சமூலம், கீழாநெல்லி சமூலம் ஆகியவற்றை மைய அரைத்து தயிரில் குடிக்கலாம்.
கீழாநெல்லி சாறு எடுத்து கறந்த பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பாலில் அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடவும்.
மூக்கிரட்டைவேர் மற்றும் மாவிலங்க பட்டை ஆகியவற்றை கசாயம் வைத்து 3 வேளை குடிக்கவும்.