காய்கறி கெடாமல் இருக்க
பிரிட்ஜில் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டி துணியை விரித்தால் காய்கறி வெகுநாள் அழுகாமல் இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
பிரிட்ஜில் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டி துணியை விரித்தால் காய்கறி வெகுநாள் அழுகாமல் இருக்கும்.
தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால் தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்கும்.
தக்காளியை ஒன்றொடுஒன்று ஒட்டாமல் கவிழ்த்து வைத்தால் அதிக நாள் கெடாமல் இருக்கும்.
பச்சை தக்காளியை பாலிதீன் பைக்குள் போட்டுக் கட்டி வைத்தால் மறுநாள் பழுத்துவிடும்.
தக்காளி பழங்களை உப்பு தண்ணீரில் நனைத்து எடுத்து வைத்தால் சீக்கிரம் அழுகி போகாது.
வெண்டைக்காய் மிஞ்சினால் அவைகள் முற்றிவிடாமல் இருக்க காம்புகளை நறுக்கி வைக்க வேண்டும்.
கீரைத்தண்டு குட்டையானதாகவும் கிளைகள் நிறைய இருப்பதாகவும் இருக்க வேண்டும், இது நாறு இல்லாமல் இளசாக இருக்கும்.
வாழைத்தண்டு,சுரைக்காய், நூல்க்கோல் முதலிய காய்கள் நகம் வைத்தால் உள்ளே போவது போல் இருக்க வேண்டும். அது தான் பிஞ்சு.