பித்தம் விலக
வேப்பம் பூவை சிவக்க பொரித்து அதனுடன் உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பம் பூவை சிவக்க பொரித்து அதனுடன் உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.
நெல்லிக்காயை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி தேனில் கலந்து காலை, மாலை 500 மில்லி அளவு குடிக்க பித்தம் குறையும்.
கொத்தமல்லி, சுக்கு, பனங்கற்கண்டு மூன்றையும் சம அளவு எடுத்து காய்ச்சி தினமும் கலையில் வெறும் வயிற்றில் குடிக்க பித்தம் குறையும்.
எலுமிச்சை பழச்சாற்றில் சீரகத்தை ஊற வைத்து அதை தினமும் சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
முருங்கைக் கீரையுடன் சிறிதளவு உப்பு போட்டு தட்டி அதன் சாற்றை எடுத்து குடிக்க பித்தம் குறையும்.
எலும்பிச்சம் பழச் சாற்றுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட பித்தம் குறையும்.
சுக்கும் சர்க்கரையும் போட்டுக் காய்ச்சிய நீரை குடித்து வந்தால் பித்தம் நீங்கும்.
கறிவேப்பிலையை துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டால் பித்தத்தை போக்கும்.