தொண்டை நோய் அகல
மாதுளம்பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து உண்டு வந்தால் தொண்டை நோய் அகலும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாதுளம்பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து உண்டு வந்தால் தொண்டை நோய் அகலும்.
வில்வஇலையுடன் மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும்.
பொன்னாவாரை விதையை பால் விட்டு மைய அரைத்து இவற்றை அருந்தி வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.
100 கிராம் முட்டைக்கோஸை பச்சையாக 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உணவுக் குழாயில் சிக்கிய கோழி எலும்பு மலத்துடன் வெளியேறும்.
எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
மாதுளம்பூவை காயவைத்து பின் மாதுளம்பட்டையுடன் சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் குணமாகும்.
கடுக்கை தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கி கொள்ளவும்.ஊறிய உமிழ் நீரை விழுங்கி வந்தால் குரல் மாற்றம் குணமாகும்.
மா இலை பொடியை 1 கிராம் அளவு எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் குரல் கம்மல் குணமாகும்.
தூதுவளை இலை, வேர், பூ, காய் ஆகியவற்றை கொதிக்க வைத்து கஷாயம் செய்து பாலில் சாப்பிட்டு வரவும்.