Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "மாதுளை (Pomegranate)"

கடுமையான ரோகம் குணமாக

500 கிராம் மாதுளம் பூச்சாற்றுடன் 200 கிராம் பசு நெய்யை சேர்த்து காய்ச்சி நன்றாக கொதி வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.இதை தினமும் காலை, மாலை தொடர்ந்து 40 நாட்கள் உண்டுவர கடுமையான கூடிய ரோகம் குணமாகும்.  →
Views : 715

நீர்க்கடுப்பு குணமாக

அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி இதை பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர நீர்க்கடுப்பு, வெட்டை நோய் அகன்று நரை திரை மாறும்.  →
Views : 847

மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நிற்க

மாதுளம்பூ சாறு, அருகம்புல் சாறு இவைகளை கலந்து 1 டம்ளர் அளவு தினமும் இருவேளை அருந்தி வர மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நிற்கும்.  →
Views : 0

சீதபேதி குணமாக

மாம்பூ, மாதுளம்பூ, மாந்தளிர் இலை மூன்றையும் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து சிறிது நீர் விட்டு அம்மியில் மை போல் அரைத்து அரைத்த கலவையுடன் பாலைக் கலந்து அருந்தி வர சீதபேதி குணமாகும்.  →
Views : 701

கண் தொடர்பான நோய்கள் குணமாக

பச்சை கற்பூரத்தையும், மாதுளம்பூவையும் சம அளவு எடுத்து இடித்து அதன் சாற்றை தாய்ப்பாலில் கலந்து கண்களில் பிழிந்து விட கண் தொடர்பான நோய்கள் குணமாகும்.  →
Views : 991

தொடர்ந்து உருவாகும் பேதி அகல

10 கிராம் மாதுளம்பூ மொட்டு, மாதுளம் பழ ஓடு, வில்வப்பழத்தின் சதை , குடசப்பாலை, ஆவாரம் பூ, முத்தக்காசு, அதிவிடயம், பீநாரிப்பட்டை இவைகளை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக் கொண்டு கஷாயமாக்கி 1 அவுன்சு வீதம் தினமும் இருவேளை அருந்தி வந்தால் தொடர்ந்து உருவாகும் பேதி அகலும்.  →
Views : 386

கடுமையான இருமல் அகல

மாதுளம்பூ மொக்குகளை வெயிலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி அதை வேளைக்கு 1 சிட்டிகை அளவு அருந்தி வர உடனடியாக இருமல் அகலும்.  →
Views : 1343

தொண்டை நோய்கள் குணமாக

மாதுளம் பூக்களை 2 மடங்கு நீர் விட்டு சுண்டக்காய்ச்சி கொதி வந்ததும் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு, தேன் விட்டுக் கலக்கி கொப்பளிக்கவும். லேசாக தொண்டைக்குள் இதை இறக்கி பின் கொப்பளித்து வந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.  →
Views : 517

தொண்டை நோய் அகல

மாதுளம்பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து உண்டு வந்தால் தொண்டை நோய் அகலும்.  →
Views : 612

ஆண்மைக்குறைவு நீங்க

மாதுளம்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்குறைவு நீங்கும்.  →
Views : 447

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X