February 1, 2013
வெள்ளி கறுக்காமல் இருக்க
லாக்கரில் அல்லது இரும்புப் பெட்டியில் வெள்ளிச்சாமன்களை வைக்கும் போது மெல்லிய பிளைவுட் பெட்டியில் வைத்து உள்ளே வைத்தால் கறுக்காது.
வாழ்வியல் வழிகாட்டி
லாக்கரில் அல்லது இரும்புப் பெட்டியில் வெள்ளிச்சாமன்களை வைக்கும் போது மெல்லிய பிளைவுட் பெட்டியில் வைத்து உள்ளே வைத்தால் கறுக்காது.
வெள்ளிப் பாத்திரத்தில் கொஞ்சம் கற்ப்பூரத்தைப் போட்டு வைத்தால் பாத்திரங்கள் கறுத்துப் போகாமல் இருக்கும்.
அவசரத்துக்கு வெள்ளியினாலான பொருள்களை பளபளப்பாக்க வேண்டுமானால் கொஞ்சம் டூத் பேஸ்டை தேய்த்து துணியினால் துடைத்தால் கருப்பு மறைந்து விடும்.
தண்ணீருடன் சிறிது பாலைக் கலந்து வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவினால் பளிச்சென்று இருக்கும்.
வெள்ளிப் பாத்திரங்களை பாலிஷ் செய்ய சிறிதளவு வாஷிங் பவுடரில் டூத் பிரஷ்ஷை சேர்த்துக் கழுவினால் பளபளக்கும்.
கடலைமாவுடன் எலுமிச்சைச்சாற்றை சேர்த்துப் பிசைந்து அதனால் வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும்.