அடிதள்ளுதல் குணமாக
பழம்புளி, கரிசலாங்கண்ணி இலை சேர்த்து அரைத்து 2 கிராம் அளவு 10 நாட்கள் சாப்பிட குணமாகும்.
வறட்டு இருமல் குணமாக
எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
தொண்டைப்புண் குணமாக
மாதுளம்பூவை காயவைத்து பின் மாதுளம்பட்டையுடன் சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் குணமாகும்.
குரல் மாற்றத்தை சரி செய்ய
கடுக்கை தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கி கொள்ளவும்.ஊறிய உமிழ் நீரை விழுங்கி வந்தால் குரல் மாற்றம் குணமாகும்.
நாக்குப்புண் குணமாக
கோடக இலையை கஷாயமாக்கி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், உதடு ரணம், நாக்குப்புண் ஆகியவை குணமாகும்.
குரல் கம்மல் தீர
மா இலை பொடியை 1 கிராம் அளவு எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் குரல் கம்மல் குணமாகும்.
மூக்கில் உள்ள புண் ஆற
மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பெண்ணெய் கலந்து மைய அரைத்து தடவலாம்.
இரைப்பு குணமாக
தூதுவளை இலை, வேர், பூ, காய் ஆகியவற்றை கொதிக்க வைத்து கஷாயம் செய்து பாலில் சாப்பிட்டு வரவும்.