வாய்ப்புண் ஆற
வாய்ப்புண் உள்ளவர்கள் தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
வாழ்வியல் வழிகாட்டி
வாய்ப்புண் உள்ளவர்கள் தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
வேப்பிலை, உப்பையும் வறுத்து பொடி செய்து தினமும் பல் துலக்கினால் வாய் நாற்றம் குறையும்.
தேங்காய்த் துண்டை வாயில் போட்டு மென்று அதையே உதட்டிலும் தடவி வரப் வாய்ப்புண் குறையும்.
பிரண்டையை உப்பு சேர்த்து அரைத்து வெண்ணெய் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட வாய்ப்புண் குறையும்.
மருதாணி இலையை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்க வாய்ப்புண் தீரும்.
வெள்ளைபூண்டு சாறு,வெற்றிலைச்சாறு இரண்டையும் கலந்து தடவி வந்தால் வாய்ப்புண் ஆறும்
சிவனார் வேம்பின் வேரை வாயில் போட்டு மென்று துப்பினால் வாய்ப்புண் குறையும்.
அரசமரத்துப் பட்டையை கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குறையும்.
வெங்காயம், வெந்தயம், அரிசி, மணத்தக்காளி கீரை இதில் மணத்தக்காளி இலையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக வதக்கி பின்பு அதே பாத்திரத்தில்...