மலச்சிக்கல் குறைய
இளநீரில சிறிது தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் மலத்துடன் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறி மலச்சிக்கல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
இளநீரில சிறிது தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் மலத்துடன் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறி மலச்சிக்கல் குறையும்.
வெள்ளாட்டு பாலில் சிறிது தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.
இளம் தென்னங்காய் (தேங்காய் குரும்பல்) மட்டையை இடித்து சாறு பிழிந்து நீரை குடித்து வந்தால் வயிற்றுக்கடுப்பு குறையும்.
லெட்டூஸ்கீரை இலைகளை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், குடல் புண் ஆகியவை குறையும். மேலும் நுரையீரல் பலப்படும்
அத்திப்பட்டை, கடுக்காய்ப்பூ சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட்டு வர இரத்தக்கடுப்பு, சீதக்கடுப்பு குறையும்.
துளசி ரசம் 10 மி.லியுடன் சிறிதளவு உப்பை கலந்து சுடு தண்ணீரில் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்
ஆலம் விழுதை எருமைத்தயிர் விட்டு அரைத்து ஒரு பலம் எடுத்து அதில் ஒரு எலுமிச்சைபழத்தின் சாறு கலந்து 3 வேளை கொடுத்தால்...
10 கிராம் ஓமம், 6 கிராம் சுக்கு மற்றும் 3 கிராம் இந்துப்பு ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி...
நன்றாக பழுத்த தக்காளி பழத்தை தீயில் வாட்டி அதை காலையில் மட்டும் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் குறையும்
ஒதியம் பட்டை இடித்து புளிப்புதயிர் விட்டு இரவில் ஊறவைத்து மறுநாள் பிழிந்து சாறு எடுத்து சிறிது பால் கலந்து கொடுக்க இரத்தப்பேதி,...