சுக்கை தோல் நீக்கி இதனுடன் மிளகு, திப்பிலி, ஏலக்காய், கிராம்பு, சிவனார் வேம்பு, வெண்கடுகு, அதிமதுரம் மற்றும் அமுக்கிரான்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து சலித்து ஒரு மண் பானையில் போட்டு தூய தேனை சிறுக சிறுக ஊற்றி மரக்கரண்டியால் இளகல் பதம் வரும் வரை ஊற்றி கிளறவும். இளகல் பதம் வந்ததும் பானையை மண் தட்டால் மூடி காற்று புகாதவாறு நன்றாக கட்டி 12 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து 3 நாட்கள் கழித்து கண்ணாடி பாத்திரத்தில் மருந்தை கை படாமல் மாற்றி பத்திரப்படுத்தவும்.