நன்னாரி வேர் பட்டை, வெட்டி வேர், சந்தனப்பட்டை ஆகியவைகளை தூளாக இடித்து 1 1/2 லிட்டர் தண்ணீரில் கலந்து, அடுப்பில் வைத்து 400 மி.லியாகச் சுண்டை காய்ச்சி, மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து வடிகட்டி அதில், இடித்துச் சலித்த ஏல அரிசி 20 கிராம், தண்ணீர்விட்டான் கிழங்கு 20 மி.லி சர்க்கரை 600 கிராம் ஆகியவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து தேன் பததம் வரும் வரை காய்ச்சி இறக்கவும். இதை ஒன்றிலிருந்து இரண்டு கப்புகள் வரை சிறிது தண்ணீர் விட்டு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று வேளை கொடுத்து வந்தால் நரம்புத் தளர்ச்சியினால் ஏற்படும் தலைசுற்று, பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்று குறையும்.