அரச மரப்பட்டையை வெட்டி எடுத்து அதன் புறனியை நீக்கி அதாவது வெளிப்புறத் தோலை சீவிவிட்டு உட்புறப் பட்டையை மட்டும் எடுத்து நன்கு துண்டாகப் பொடித்து வெயிலில் உலர்த்தி கல்லுரலில் இடித்து தூள் செய்து துணியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த தூளை இரண்டு சிட்டிகை எடுத்து நீரில் ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு குறையும்.