அகத்தி இலைகளை எடுத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து இரண்டு டம்ளர் நீர் விட்டு நன்றாக சுண்டக் காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி சிறிதளவு உப்பு சேர்த்து காலை வேளையில் குடித்து, பிறகு அந்த கீரையை தேங்காய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.