கீழ்கண்ட மூலிகைகளை நிழலில் உலர்த்தி இடித்து சலித்து பனங்கற்கண்டை பொடித்து போட்டு பானையில் போட்டு மண்பானையை மூடியால் மூடி அதற்கு மேல் துணியால் கட்டி நிலத்தில் புதைத்து 7 நாட்கள் கழித்து எடுத்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.
- துத்திவேர்
- சோம்பு.
- நிலஆவாரை
- பனங்கற்கண்டு.
- பசும்பால்.
- இளநீர்.
செய்முறை:
- துத்தி செடியின் வேரை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
- சோம்பை ஒரு மண் பானையில் போட்டு 200 மி.லி பசும்பாலை ஊற்றி பிசைந்து கழுவி நிழலில் உலர்த்தி நன்றாக இடிக்கவும்.
- நில ஆவாரையை மண் பானையில் போட்டு 200 மி.லி இளநீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
- பிறகு மூன்றையும் ஒன்றாக போட்டு இடித்து சலித்து கொள்ளவும். இதனுடன் பனங்கற்கண்டை சுத்தம் செய்து இடித்து பொடித்து போட்டு மண்பானையை மூடியால் மூடி அதற்கு மேல் துணியால் கட்டி வைக்கவும்.
- பிறகு தரையில் பானை நிரம்பும் அளவு குழி தோண்டி வைத்து மண்ணால் மூடவும். 7 நாட்கள் கழித்து எடுத்து வேறு புதிய பானையில் வைத்து பத்திரப்படுத்தி சாப்பிட்டு வரவும்
உபயோகிக்கும் முறை:
- காலை சாப்பாட்டிற்கு முன் 1 தேக்கரண்டி சாப்பிட்டு 150 மி.லி ஆறிய வெந்நீர் குடிக்கவும். மாலையும் இது போல் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மூலம் குறையும்.